தண்டவாளத்தை கடந்தபோது சோகம்.. கல்லூரி மாணவி இரயிலில் அடிபட்டு உடல்சிதறி மரணம்.!



karnataka-hassan-college-girl-preethi-died-train-hit-sh

கல்லூரிக்கு சென்றுகொண்டு இருந்த மாணவி, கால் இடறி தண்டவாளத்தில் தவறி விழுந்து இரயிலில் அடிபட்டு பலியான சோகம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம், ஒஸஹள்ளி குட்டததீரண்ணா கிராமத்தில் வசித்து வருபவர் பிரீத்தி (வயது 18). இவர் அங்குள்ள அரசு கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று கல்லூரிக்கு வழக்கம்போல் பிரீத்தி நடந்து சென்றுகொண்டு இருந்துள்ளார். 

அந்த சமயத்தில், அவ்வழியில் உள்ள தந்திடவாளத்தை கடந்து செல்ல முற்பட்டபோது, எதிர்பாராத விதமாக கால் இடறி கீழே விழுந்துள்ளார். அப்போது, மைசூரில் இருந்து ஹாசன் நோக்கி சென்ற இரயில் மோதி உடல் சிதறி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

karnataka

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த இரயில்வே காவல் துறையினர், பிரீத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உள்ளூர் மக்கள் குறிப்பிட்ட இடத்தில இரயில் தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் கேட்டும் அமைத்து தராததே உயிரிழப்புக்கு காரணம் என குற்றசாட்டை முன்வைத்தனர். 

கல்லூரியில் மாணவியுடன் பயின்று வரும் சக மாணவ - மாணவிகள் திடீர் போரட்டத்தில் இறங்கி டயரை கொளுத்தியதால் பரபரப்பு  ஏற்படவே, முன்னெச்சரிக்கையாக கூடுதல் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டனர். அதன்பின், இரயில்வே காவல் துறையினர் மற்றும் இரயில்வே அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி பாலம் அமைக்க ஒப்புக்கொண்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.