தேர்வில் பிட் அடித்து சிக்கியதால் வருத்தம்.. கல்லூரி மாணவி 5 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.!



Karnataka Kolar Bangalore College Girl Bhawya Suicide due to Copy Malpractice in Exam

கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் பிட் அடித்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவி, தங்கும் விடுதியின் 5 ஆவது தளத்தில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டம், முள்பாகலை கிராமத்தில் வசித்து வருபவர் பவ்யா (வயது 21). இவர் பெங்களூர் கோரமங்களா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பி.காம் பயின்று வந்துள்ளார். இதற்காக அங்குள்ள ஜீவன் பீமாநகரில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்வில், பவ்யா பிட் எடுத்து சென்று மாட்டிக்கொண்டதாக தெரியவருகிறது. இதனால் கல்லூரி நிர்வாகம் பவ்யாவிடம் தேர்வு விடைத்தாளை வாங்கி வைத்து வெளியே அனுப்பியுள்ளனர். மேலும், தேர்வு எழுதவும் கல்லூரி நிர்வாகம் தடை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

karnataka

இதனால் மனமுடைந்துபோன பவ்யா, வருத்தத்திலேயே இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினத்தில் தனது தங்கை திவ்யாவுக்கு தொடர்பு கொண்ட பவ்யா, நடந்ததை கூறி நான் தற்கொலை செய்ய போகிறேன் என கூறி அழைப்பை துண்டித்து இருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த திவ்யா பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

பெற்றோர்கள் உடனடியாக பெங்களூருக்கு புறப்பட்டு சென்ற நிலையில், தங்கும் விடுதியின் 5 ஆவது தளத்திற்கு சென்ற பவ்யா, கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து சென்ற ஜீவன் பீமாநகர் காவல் துறையினர், பவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.