இந்த மாதிரி நாவூறச்செய்யும் வத்தல் குழம்பு சாதம்.. சொக்கி போக செய்யும் சுவையில் செய்யலாம் வாங்க.!



delicious-raisin-curry-rice

வத்தல் குழம்பு சாதம் இந்த மழை நேரத்தில் செய்து அப்பளம் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் பாட்டி, அம்மா கையால் மசாலா அரைத்து செய்து கொடுத்தால் மூன்று வேளையும் சாப்பிட தோன்றும். இந்த சுவையான வத்தல் குழம்பு சாதம் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

முதலில் மசாலா அரைக்க வேண்டும். அது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

சீரகம் - 1 தேக்கரண்டி 

எண்ணெய் - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் - 10 அல்லது 15

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

கருவேப்பிலை - 2 கொத்து 

சோம்பு - 1 தேக்கரண்டி 

கொத்துமல்லி விதைகள் - 1 தேக்கரண்டி

மசாலா செய்முறை :

அடுப்பைப் பற்ற வைத்து, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மேலே கொடுக்கப்பட்ட அளவுகளின் படி சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கொத்துமல்லி விதைகள், வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து வறுத்து அம்மியில் நன்றாக அரைத்துப் பொடி செய்து தனியாக வைத்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: பாய் வீட்டு, சீக்ரெட் மசாலா.. இதுல ஒரு ஸ்பூன் சேர்த்தால் உங்க பிரியாணியும் பிரமாதம் தான்.!

வத்தல் குழம்பு சாதம் செய்ய தேவையானப் பொருட்கள் :

நல்லெண்ணெய் - 2 மேஜை கரண்டி 

கடுகு - 1/2 மேஜை கரண்டி 

வெந்தயம் - 1/4 மேஜை கரண்டி 

காய்ந்த மிளகாய் - 2

கடலைப் பருப்பு - 1/2 மேஜை கரண்டி

சுண்டக்காய் வத்தல் - 1 சின்ன கப் 

அரிசி - 1 கப் 

மஞ்சள் தூள் - 1/2 மேஜை கரண்டி 

சின்ன வெங்காயம் - 15

பூண்டு - 10 ( பல் )

தேங்காய் துருவல் - 1/2 கப் 

புளி - தேவையான அளவு (கரைத்து வைத்துக் கொள்ளவும் )

தக்காளி - 2 ( விழுதாக அரைத்தது )

கருவேப்பிலை - 2 கொத்து 

வெல்லம் - 1/4 மேஜை கரண்டி

பெருங்காயம் - 1/4 மேஜை கரண்டி 

Gourd

செய்முறை :

முதலில் அடுப்பைப் பற்ற வைத்து அதில் குக்கரை வைக்க வேண்டும். அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சுண்டக்காய் வத்தலைப் போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு, அதே எண்ணெயில் கடுகு, வெந்தயம், கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட்டு பொறிய விட்டு, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

பின்பு, தக்காளி விழுது, மஞ்சள் தூள், பெருங்காயம், அரைத்து வைத்துள்ள மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். தேங்காய் துருவல் மற்றும் பாதி அளவு வறுத்த சுண்டக்காய் வத்தல் எடுத்து அம்மியில் நன்றாக அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டதை இதில் சேர்த்து நன்றாக வதக்கி எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் 1 கப் அரிசிக்கு, 3 கப் தண்ணீர் மற்றும் புளிக்கரைசலையும் சேர்த்து 1 கொதி விட வேண்டும்.

பிறகு, இதில் வெல்லம், ஊற வைத்த அரிசி மற்றும் மீதம் இருக்கும் சுண்டக்காய் வத்தல் சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு குக்கரை விசில் போட்டு மூடி வைக்கவும். 5 விசில் விட்டு இறக்கி விட வேண்டும். சாதம் நன்றாக குழைந்து இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும். இப்போது, சூடான சுவையான வத்தல் குழம்பு சாதம் ரெடி.