கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பட்டை.. வேறு என்னென்ன நன்மைகள்.!?



health-benefits-of-using-cinnamon

பட்டை (Cinnamomum verum) என்பது ஒரு வகையான மரமாகும். அதன் இலைகள் மற்றும் வேர்கள் பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. பட்டையின் முக்கிய பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களை பற்றி இப்பதிவில் விளக்கமாக காணலாம்.

Cinnamon

1. பட்டை, உணவுப் பொருட்களில் சுவையூட்டியாக பயன்படுத்தப்படுகிறது. இது உணவுக்கு சிறந்த மணம் மற்றும் சுவையை சேர்க்கும்.

இதையும் படிங்க: உயரத்தை அதிகரிக்கச் செய்யும்.. 5 உணவுகள்.. ஒரே மாதத்தில் கண்கூடாக வளர்ச்சியை காணலாம்.!

2. நீரிழிவு பிரச்சனை, நரம்பியல் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும் மற்றும் ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவி புரிகிறது.

4. இது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை சரி செய்து சீரமைப்புக்கு உதவுகிறது. மேலும் செரிமானத்தை மேம்படுத்தக்கூடியதாகவும் இருந்து வருகிறது.
5. பட்டையில் நோய் எதிர்ப்பு மற்றும் அன்டி-மைகிரோபியல் குணங்கள் உள்ளன. இது உடலை பாதிக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படுகிறது.
6. சிறிது பட்டையை தினமும் சாப்பிடுவதன் மூலம், அதிகப்படியான  கொலஸ்டரோல் அளவை குறைக்கும். மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கிறது.
7. மேலும் நுரையீரலை பாதிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொல்லையை நிவர்த்தி செய்ய உதவுகிறது.
8. பட்டையை உபயோகப்படுத்துவதற்கு முன்பு நீரிழிவு பிரச்சினை இருப்பவர்கள் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனையை இருப்பவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.

Cinnamon

பட்டையின் மருத்துவ குணங்கள்:

உடல் எடை குறைப்பு, தூக்கமின்மை பிரச்சனை, மூட்டு வலி, பற்கள் மற்றும் ஈறுகளில் பிரச்சனை போன்றவற்றையும் சரி செய்கிறது.

எவ்வாறு பயன்படுத்தலாம் ?
 பட்டையை தூளாக எடுத்துகொண்டு தினமும் பற்களை துலக்கி வரலாம். மேலும் தினசரி உணவுகளில் சிறிது பட்டை தூளை சேர்ப்பது, பல்வேறு உடல் நலனை மேம்படுத்தும். பட்டையை நீரில் ஊற வைத்து இதனை ஒரு டீயாக குடிப்பதால், குளிர்காலத்தில் ஏற்படும் சளி இருமல் போன்ற தொல்லைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கக்கூடும்.

இதையும் படிங்க: உங்களுக்கு துரோகம் நடக்க போவதை உணர்த்தும் அறிகுறிகள்..! கவனித்தால் தப்பிக்கலாம்.!