மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்றோர்களே ஜாக்கிரதை.. கேட் விழுந்து 3 வயது சிறுவன் பரிதாப பலி.. வினையான விளையாட்டு..!
குடியிருப்பு வளாக கதவின் மீது சிறுவர்கள் ஏறி விளையாடிய நிலையில், அது திடீரென கீழே விழுந்ததில் 3 வயது சிறுவன் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தான்.
கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டம், ஈரட்டுப்பேட்டையில் வசித்து வருபவர் நடக்கல் கொன்னச்சடத்து ஜவாத். இவர் தற்போது குவைத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மகன் அஹ்சல் அலி ஜஹாத் (வயது 3). கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக நடக்கலின் குடும்பத்தினர் குவைத்தில் இருந்த நிலையில், சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
நடக்கல் மட்டும் பணியின் காரணமாக குவைத்திலேயே இருந்துள்ளார். சிறுவன் தனது தாத்தாவின் வீட்டில் இருந்த நிலையில், நேற்று மாலை நேரத்தில் வீட்டருகே உள்ள 3 குழந்தைகளுடன் அஹ்சல் விளையாடிக்கொண்டு இருந்துள்ளான். அப்போது, சிறுவர்கள் ஆர்வ மிகுதியாக குடியிருப்பு வளாகத்தின் இரும்பு கேட்டின் மீது ஏறி இருக்கின்றனர்.
இதன்போது, எதிர்பாராத விதமாக கேட் சரிய தொடங்க, பிற சிறார்கள் சற்று தள்ளி கீழே விழுந்துள்ளார். அஹ்சல் அலி ஜஹாத் மட்டும் இரும்பு கேட்டின் அடியில் சிக்கிக்கொள்ள, அவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அலி ஜஹாத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
ஆனால், சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினரும் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறார்கள் விளையாடும்போது பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.