மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீ விபத்துக்காக பயந்து மாடியில் இருந்து குதித்த சிறுமி மரணம்; பயத்தால் பறிபோன உயிர்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியைச் சார்ந்த பெண்மணியின் உறவினர் வீடு மத்திய பிரதேசத்தில் உள்ள சாகரில் இருக்கிறது.
சம்பவத்தன்று இவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்கள் தங்கியிருந்த வீட்டின் தரைத்தளத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் குடும்பத்தினர் பதறிப்போன நிலையில், தீ இரண்டாவது மாடிக்கும் பரவியுள்ளது. எப்படி கீழே இறங்கி செல்வது என தெரியாமல் அனைவரும் விழிபிதுங்கி இருக்கின்றனர்.
தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துகொண்டு இருந்துள்ளனர். அச்சமயம் பெண்ணின் மகள் ஏஞ்சலின் ஜெயின், இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த 13 வயது சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.