பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
200 கீ.மீ கால்நடையாக வந்து ஊர் எல்லையை நெருங்கிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்! கொரோனா அச்சத்தால் உறவினர்கள் பீதி!
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து கால்நடையாக ஆந்திராவில் இருக்கும் சொந்த ஊருக்கு வரும் வழியில் இறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊரை விட்டு வெளியில் வேலை பார்த்தவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், ராமசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்பவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். ஊரடங்கு அமலில் இருப்பதால் சொந்த ஊருக்கு நடந்தே புறப்பட்டார் ஹரி.
சுமார் 200 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து தனது சொந்த ஊரான ராமசமுத்திரம் அருகே வந்தபோது நேற்று முன்தினம் ஹரிபிரசாத் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். அதனை தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உறவினர்களுக்கு தகவல் அனுப்பினர்.
ஹரி கொரோனா தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சத்தால் அவரது உடலை உறவினர்கள் எடுத்து செல்ல மறுத்துள்ளனர். ஆனால் சோதனைக்கு பிறகு அவருக்கு கொரோனா தோற்று இல்லை என்பதையும், பசி, சோர்வு காரணமாக தான் உயிரிழந்துள்ளார் என்பதையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் உடலை பெற்ற உறவினர்கள் நேற்று இறுதி சடங்கினை செய்துள்ளனர்.