பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பெண்கள் விடுதியில் ரகசிய கேமிரா! மீண்டும் ஒரு விடுதி உரிமையாளர் கைது!
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னையில் பெண்கள் தங்கும் விடுதியில், விடுதியின் உரிமையாளர் ரகசியமாக கேமிரா வைத்து பெண்களை புகைப்படம், வீடியோ எடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வீட்டின் உள்ளே கேமிரா இருப்பதை கண்டறிந்த பெண்கள் காவல் துறை உதவியோடு விடுதி உரிமையாளரை கைது செய்த்தனர்.
இந்நிலையில் இதுபோன்று மீண்டும் ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பை கிர்கான் பகுதியில் உள்ள அந்த விடுதியில் விடுதியின் உரிமையாளர் பெண்கள் தங்கும் விடுதியின் கழிவறையில் ரகசிய கேமிரா வைத்து, அவர்களை புகைப்படம், வீடியோ எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விடுதியில் தங்கி இருந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விடுதி உரிமையாளரை கைது செய்துள்ளனர். முதலில் பெண்கள் தங்கி இருந்த அறையில் ஒரு சிறிய வகை எலெக்ட்ரிக் அடாப்டரை பொறுத்தியுள்ளார்.
மேலும் சில காலமாக அந்த பெண்கள் தங்களது அறையில் பேசிக்கொள்ளும் வசனங்களை அந்த நபர் ஒட்டு கேட்டு அதை அந்த பெண்களிடம் மிமிக்கிரி செய்து காண்பித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெண்கள் தங்களது அறையை சோதனையிட ஆரம்பித்தனர்.
முதலில் அவர்கள் அந்த அடாப்டரை கண்டறிந்தனர். இது வெறும் ஒட்டு கேட்க்கும் கருவி என நினனைத்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது வெறும் ஒட்டு கேட்கும் கருவி மட்டும் அல்ல வீடியோ பதிவு செய்யும் கருவி என்று இணையதளம் மூலம் உறுதி படுத்தினர்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த நபர் விடுதியில் மினிவிசிறி, கழிவறை, கடிகாரம் போன்ற இடங்களில் ரகசிய கேமிரா வைத்ததை ஒப்பு கொண்டார். மேலும் அவரது கணினியில் இருந்து பெண்களின் விடீயோவையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.