தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அடேங்கப்பா! இந்தியாவில் மொத்தம் இத்தனை அரசியல் கட்சிகள் உள்ளனவா?
2019 நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு, மார்ச் 9 ஆம் வரை இந்தியா முழுவதும் மொத்தம் 2293 அரசியல் கட்சிகள் பதிவாகியுள்ளதாம். அவற்றில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மட்டும் 149 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
149 புதிய கட்சிகளும் இந்த நாடாளுமன்ற தேர்துலுக்காக திடீரென துவங்கப்பட்டவைகளாகும். மொத்த 2293 கட்சிகளில் அங்கீகாரம் பெற்ற தேசிய கட்சிகள் 7 மற்றும் மாநில கட்சிகள் 59 ஆகும்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன்னர் வரை 2143 கட்சிகள் மட்டுமே பதிவாகி இருந்துள்ளன. அதிலும் 58 கட்சிகள் கட்ந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பதிவாகியுள்ளன.
புதிதாக பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகள் அனைத்தும் அவர்களுக்கென எந்த சின்னத்தையும் வைத்துக்கொள்ள முடியாது. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் ஏதாவதொரு சின்னத்தில் தான் அவர்கள் போட்டியிட முடியும். தற்போதைய நிலவரப்படி இதைப்போன்று 84 சின்னங்கள் தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியானது அங்கீகாரம் பெற, ஒரு கட்சியானது இதற்கு முன்னர் நடைபெற்ற சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட வாக்கு சதவிகிதம் அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இதில் ஒருசில கட்சிகள் எந்த தேர்தலிலுமே போட்டியிடாமல் வெறுமனே கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காகவே ஆரம்பிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் வருமண வரித்துறையினர் உதவியுடன் 255 கட்சிகளை பதிவு நீக்கம் செய்துள்ளது. இந்த கட்சிகள் அனைத்தும் 2005 முதல் 2015 வரை எந்த தேர்தலிலுமே போட்டியிடவில்லையாம்.