திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சட்டவிரோதமாக வனவிலங்குகளுக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 2 இளம் சிறார்கள் பரிதாப பலி: ஆடு தேடிச்சென்றபோது சோகம்.!
ஒடிஷா மாநிலத்தில் உள்ள சோனிபூர், Hatlimunda கிராமத்தை சேர்ந்தவர் நபின் டுங்டுங் (வயது 45). இவரின் மகன் ஜீத் (வயது 14), உறவினர் ரமேஷ் (வயது 14).
டிசம்பர் 09ம் தேதி இவர்கள் வளர்த்து வந்த ஆடு மாயமானதால், சிங்கப்பளி வனப்பகுதியில் தங்களின் காலந்டையை தேட சென்றுள்ளனர். இரவில் நீண்ட நேரம் ஆகியும் இவர்களும் வரவில்லை.
இதனால் பதறிப்போன குடும்பத்தினர் கிராம மக்களுடன் ஒன்று திரண்டு வனத்திற்குள் சென்று பார்த்தபோது, அங்கு வனவிலங்குகளின் நடமாட்டத்தை தடுக்க வைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி சிறுவர்கள் இரண்டு பேர் பலியானது தெரியவந்தது.
அவர்களுடன் சென்ற நபின் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், உயிரிழந்த சிறார்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மயக்க நிலையில் மீட்கப்பட்ட டுங்டுங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.