பிரேக்கிங்: Paytm செயலி கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து திடீர் நீக்கம்.! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்.
கூகுள் நிறுவனத்தின் விதிகளை மீறியதாக கூறி பிரபல பேடிஎம் நிறுவன செயலியை கூகிள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரிலிருந்து நீக்கி உள்ளது.
பேடிஎம் செயலியை நீக்கியது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூகுள் நிறுவனம் எந்த ஒரு சூதாட்ட பயன்பாட்டிற்கும் ஒப்புதல் அளிக்காது எனவும், நாங்கள் ஆன்லைன் சூதாட்ட விதைகளை அனுமதிக்க மாட்டோம் அல்லது இது போன்ற விளையாட்டு பந்தயத்தை எளிதாக்கும் எந்தவொரு பயன்பாடுகளையும் ஆதரிக்க மாட்டோம் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பேடிஎம் செயலியானது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ள பேடிஎம் நிறுவனம் புதிய பதிவிறக்கம் மற்றும் புதுப்பிப்பதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் பேடிஎம் ஆண்ட்ராய்டு பயன்பாடு தற்காலிகமாக கிடைக்காது எனவும் இந்த சேவை விரைவில் திரும்ப வரும் எனவும் கூறியுள்ளது.
மேலேயும் உங்கள் பணம் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது எனவும் பழைய பேடிஎம் வாடிக்கையாளர்கள் உங்கள் செயலியை இயல்பாக தொடரலாம் எனவும் அந்த பதிவில் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேடிஎம் செயலி திடீரென பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது பேடிஎம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.