குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
தேசியப்பறவையான மயில் கறியை சாப்பிட்ட யூடியூபர்; கம்பி என்ன வைத்த வனத்துறை.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிர்சிலா மாவட்டத்தில் வசித்து வருபவர் கொடாம் பிரணாய். இவர் யூடியூபராக இருந்து வருகிறார். தனது வாழ்நாட்களில் நடைபெறும் பல்வேறு விடீயோக்களை தொகுத்தும் இவர் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் தேசியப்பறவையான மயிலை சமைத்து சாப்பிட்டதாக வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வனத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இதையும் படிங்க: மீட்புப்பணிகளில் ஈடுபட்ட இராணுவ வீரர்களை உயரிய கௌராவுடன் வழியனுப்பி வைத்த மக்கள்; நெகிழவைக்கும் காட்சி.!
யூடியூபர் கைது
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிரணாயை கைது செய்தனர். மயில் கறியும் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில் அவர் மயில் கறி சமைத்துள்ளது உறுதியானால், கடுமையான தண்டனை கிடைக்கும் எனவும் சட்ட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: 10 வயது சிறுமியை சீரழித்த 57 வயது காம பிசாசு; நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!