மீட்புப்பணிகளில் ஈடுபட்ட இராணுவ வீரர்களை உயரிய கௌராவுடன் வழியனுப்பி வைத்த மக்கள்; நெகிழவைக்கும் காட்சி.!



Kerala Peoples Emotional Sent off to Indian Army Who Works on Kerala Landslides 

 

கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டம் சூரல்மலை, அட்டமலை, முண்டகை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான நிலச்சரிவு ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. 

4 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து வலுப்பெற்று காணப்பட்ட தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தன்மை காரணமாக பெய்த மழையில், மிகப்பெரிய அளவிலான நிலம் சரிந்து 3 கிராமங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்துபோயின. 

இதையும் படிங்க: வயநாடு: 36 மணிநேரத்தில் 190 அடி நீளமுள்ள இரும்பு பாலம் அமைப்பு; மாஸ் காண்பித்த இராணுவம்.!

இதனால் 9 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 350 க்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கேரளா மாநில அரசின் சார்பில் முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவி செய்யப்படுகிறது. 

மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்ட இராணுவ வீரர்கள்

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் உடல்கள் அங்கேயே வெவ்வேறு இடங்களில் மொத்தமாக புதைக்கப்பட்டன. இந்த பணியில் தேசிய, மாநில மீட்புப்படை அதிகாரிகள், இராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். 

மீட்பு பணிகள் அனைத்தும் ஏறக்குறைய நிறைவுபெற்று, இராணுவ வீரர்கள் தங்களின் அடுத்த பணியிடத்தை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர். அவர்களை முகாம்களில் உள்ள மக்கள் கைதட்டி மரியாதை செலுத்தி அனுப்பி வைத்தனர். 

உறக்கமின்றி இரவு - பகலாக மக்களை பாதுகாத்து, தங்களின் உயிருக்கு உயிரான உறவினர்களின் உடல்களையும் மீட்டுக்கொடுத்த இராணுவத்தினர் அம்மண்ணை விட்டு பிரிந்ததற்கு மக்கள் உயரிய மரியாதை செலுத்தியது கவனத்தை பெற்றுள்ளது. 

இதையும் படிங்க: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு; ரூ.20 இலட்சம் நிதிஉதவி வழங்கிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி.!