மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோடீஸ்வரரான, PAYTM ஓனர், கேரள வெள்ளத்துக்கு அளித்த நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா?. அவ்வளவு பெரிய கோடீஸ்வரர் செய்த செயலால் வெறுப்பான மக்கள்!.
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்ப்பட்ட வெள்ளத்தால் இதுவரை 330 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பலரும் நிவாரண நிதி கொடுத்து உதவுகின்றனர். சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் நிவாரண நிதியை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியவில் கோடிஸ்வரர்களில் ஒருவரான பேடிஎம் உரிமையாளர் ராஜசேகர் அவர்கள் கொடுத்த நிதியுதவியைக் கண்டு சமூகவலைத்தளத்தில்,விமர்சித்து வருகின்றனர்.
கேரளாவில் கடந்த ஒரு மாதகாலமாக பெய்து வரும் கனமழையால், மாநிலமே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது. சொகுசாக வாழ்ந்தவர்கள் கூட உன்ன உணவின்றி, குடிக்க நீரின்றி, ஆடைகள் இல்லாமல் தத்தளித்து வருகின்றனர்.
இதனால் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள், சிறுவர், சிறுமியர் கூட தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில், PAYTM நிறுவனருமான ராஜசேகர் கேரளாவில் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு பத்தயிராம் ரூபாயை நிதியுதவியாக அளித்துள்ளார்.
இதை அவர் தான் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாகவும் அதேபோல் நிதியுதவி அளிக்கவிரும்புவோர் PAYTM பயன்படுத்தி நிதியுதவி அளிக்கலாம் என மொபைல் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.
அந்த பகிர்வை பார்த்த மக்கள், தங்களால் முடியாமல் போன கூட எப்படியாவது பலர் உதவி செய்ய வேண்டும் என்று ஏதாவது ஒரு வழியை தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி சேர்த்து வைத்திருந்த பணம், அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணம், என அவசரத்திற்கு வைத்திருந்த பணம் போன்றவற்றை அப்படியே கொடுக்கின்றனர்.
ஆனால் 11,865 கோடி சொத்துக்கு சொந்தக்காரரான இவரின் செயல் ஒரு மலிவான விளம்பரம், அவருடைய சொத்து மதிப்பிற்கு இது அற்பத்தொகை என விமர்சித்து வருகின்றனர். விமர்சனங்களை கண்ட ராஜசேகர் அவர் போட்டிருந்த பதிவினை நீக்கினார். அனாலும் அதை ஸ்கீரின் ஷாட் எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.