மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம மாஸ்! ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒத்த செல்பி.! குவியும் பாராட்டுக்கள்!!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்றைய காலத்தில் செல்பி எடுப்பது ஒரு நாகரிகமாக விளங்கி வருகிறது.மேலும் அனைவரும் எங்கு சென்றாலும் செல்பி எடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு பல ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பாதுகாப்பாக இருக்க பல விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இளைஞர் ஒருவரின் செல்பி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அதாவது கேரளாவை சேர்ந்தவர் பிரணவ் மாற்றுத்திறனாளியான இவருக்கு இரண்டு கைகளும் இல்லை. அவர் தனது அனைத்து வேலைகளையும் தனது கால்களாலேயே செய்து வருகிற. ர் மேலும் தேர்தலில் கூட அவர் மின்னணு ஓட்டு இயந்திரத்தில் தனது கால்களாலேயே ஓட்டு போட்டுள்ளார்.
இந்நிலையில் பிரணவ் கேரள மாநில வெள்ள நிவாரண நிதி அளிப்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துள்ளார். அப்பொழுது அங்கு அவரை சந்தித்த பினராயி விஜயன் பிராணாவின் கால்களை பிடித்து அவரை வரவேற்றார். பின்னர் நிவாரண நிதிக்கான காசோலையை தனது கால்களாலேயே முதல்வரிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து தனது கால்களாலேயே முதல்வருடன் செல்பி எடுத்துள்ளார.இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் அது இந்திய அளவில் வைரலாகி வருகிறத.