#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நம்பி அனுப்பி வைச்சேன் இப்படி அடிச்சே கொன்னுட்டியேடா பாவி; அண்ணணிடம் மகனை பறிகொடுத்த தங்கை கதறல்...!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே குடும்பத் தகராறில் தன் தங்கை மகனையே அடித்துக்கொன்ற தாய்மாமனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்கள் ஜெயசங்கர் கிரிஜா தம்பதியினர். இவர்களது மகன் தருண் குமார் (20). இவர் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சின்ன லத்தேரியில் உள்ள கிரிஜாவின் அண்ணன் ரமேஷ் வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ரமேஷின் மகள் செல்போனில் அடிக்கடி யாருடனோ பேசி வந்துள்ளார். இதுபற்றி, தருண் குமார் தனது மாமா ரமேஷிடம் கூறியுள்ளார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் ரமேஷ் தருண் குமாரை தாக்கியுள்ளார்.
இதனை அறிந்த தரண் குமாரின் தாய் கிரிஜா நேற்று இரவு சின்ன லத்தேரியில் உள்ள அண்ணன் ரமேஷின் வீட்டிற்கு வந்து அவரிடம் தனது மகனை தாக்கியது பற்றி கேட்டுள்ளார். அப்போது இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அருகில் கிடந்த தென்னை மட்டையை எடுத்து தருன்குமாரை சரமாரியாக அடித்துள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த தருண்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தருண் குமார் உயிரிழந்தார்.
தகவலறிந்த லத்தேரி காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்து தமிழிசை கைது செய்தனர் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.