பெண் பிட்னஸ் கோச் போல நடித்து, பெண்களின் நிர்வாணப்படங்களை காண்பித்து மிரட்டிய 22 வயது இளைஞர்..!
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பெண் பிட்னஸ் பயிற்சியாளர் போல நடித்து செல்போனில் பேசி உடற்பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்த பெண் வாடிக்கையாளர்களிடம் அவர்களின் நிர்வாண புகைப்படங்களை பெற்று அதனை மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
மேலும் சில பெண்களிடம் அவர் நேரடியாக நிர்வாண புகைப்படங்களையும் கேட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.
பெண் பயிற்சியாளர் போல பாவித்த அந்த நபர் பெண் வாடிக்கையாளர்களிடம் உடலை வலுப்படுத்த உதவுகிறேன் என்று கூறி நிர்வாண புகைப்படங்களை கேட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மிரட்டல் வந்த பின்னரே சம்பந்தப்பட்ட நபர் பெண் அல்ல, ஆண் என்பது தெரியவந்துள்ளது.
பின் காவல்நிலையத்தில் பெண்கள் புகாரளித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட நபரின் செல்போனில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட நிர்வாண வீடியோக்களை கைப்பற்றிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.