மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரட்டை குழந்தையை சுமந்த கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சையளிக்க மறுப்பு.. தாய், சேய் என மூவரும் பலி.. கர்நாடகத்தில் தமிழக கர்ப்பிணிக்கு நடந்த பயங்கரம்..!!
ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் இல்லாததால் மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணி, 2 ஆண் குழந்தையுடன் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்குரு மாவட்டத்தில் வசித்து வந்த பெண்மணி கஸ்தூரி (வயது 30). இவரது கணவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாக தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 6 வயதுடைய ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னதாக கஸ்தூரி கர்ப்பிணி ஆகியுள்ளார்.
இதற்கிடையில் அவரது கணவரும் தற்கொலை செய்து கொண்டதால் அவர் பெங்களூரில் இருந்து தும்குரு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளார். அங்கு கூலிதொழிலாளியாக பணியாற்றி வாழ்க்கையை நகர்த்தி வந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு அவரிடம் ஆதார் கார்டு உட்பட அரசின் அடையாள அட்டைகள் இல்லை என்பதால், மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சையளிக்கக்கூட மறுப்பு தெரிவித்து பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரின் கருவில் இருந்த 2 ஆண் குழந்தைகளும் இறந்து பிறந்துள்ளது. அத்துடன் தாயும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்று தெரியவரும் நிலையில், கர்ப்பிணி பெண்ணுக்கு தனியார் மருத்துவமனை அடையாள அட்டையை காரணம் காட்டி பிரசவம் பார்க்க மறுத்ததால் அவர் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. மேலும், இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சுகாதாரத்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு மருத்துவர் உட்பட 3 செவிலியர்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.