திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பொதுத்தேர்வில் உயிரை பணயம் வைத்து பிட்டு அடிக்க உதவி.. வைரல் வீடியோ!
ஹரியானா மாநிலத்தில் பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு உயிரை பணயம் வைத்து பிட்டு பேப்பர் வழங்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தற்போது 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி ஹரியானா மாநிலத்திலும் பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், அதிர்ச்சிகளும் சம்பவம் ஒன்றே நடைபெற்றுள்ளது.
அதன்படி ஹரியானா மாநிலம் நூ பகுதியை சேர்ந்த சந்திரபதி பள்ளியில் பொதுத்தேர்வு நடைபெற்று வந்த நிலையில், பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் பலர் தேர்வு வினாக்களுக்கான பதில் அடங்கிய விட்டு பேப்பர்களை தயாரித்து மாணவர்களுக்கு கொடுத்துள்ளனர்.
video is of Haryana's 10th board exam! Tawadu Exam Center in Nuh district during the Haryana Board Physical Education exam. How the game of imitation was going on without caring for life by climbing the windows. Don't know where the police were ? #Haryana #BoardExams pic.twitter.com/cPbg1dY3FH
— ketan joshi (@KetJoshiEditor) March 6, 2024
அதிலும் குறிப்பாக அந்த பள்ளியின் சுற்றுச்சுவர் மீது கயிறு போட்டு ஏறி சென்று மாணவர்களுக்கு ஜன்னல் வழியாக பிட்டு பேப்பர்களை வழங்கியுள்ளனர். இதனை அப்பகுதியில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஹரியானா மாநில பொதுத் தேர்வில் ஹிந்தி மற்றும் உருது வினாத்தாள்கள் லீக்கானது குறிப்பிடத்தக்கது.