மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Accident: அதிவேக பயணம்.. பிக்கப் ட்ரக் கவிழ்ந்து 10 பேர் பரிதாப பலி., 12 பேர் படுகாயம்.! கோர விபத்து..!!
24 பேருடன் பயணம் செய்த ட்ரக் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜுன்ஜுனு மாவட்டம், குதா கோர்ஜி பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 24 க்கும் மேற்பட்டோர் ட்ரக்கில் சொந்த ஊருக்கு சென்றுகொண்டு இருந்த நேரத்தில், அதிவேக பயத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ட்ரக், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
விபத்தில், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், 12 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் 2 பேரின் நிலைமை மோசமான வகையில் உள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.