உலகின் எந்த சக்தியாலும் இந்திய நிலத்தின் ஓர் அங்குல பகுதியை கூட எடுத்து செல்ல முடியாது! ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்திய மத்திய பாதுகாப்பு மந்திரி!
ஜம்மு காஷ்மீர் மற்றும் கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று காலை தனிவிமானம் மூலம் லடாக்கில் உள்ள லே பகுதிக்கு சென்றார். அவருடன் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் பிபின் ராவத், தரைப்படை தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே ஆகியோரும் சென்றனர்.
அங்கு, அவர்கள் முன்னிலையில், எல்லைகளை பாதுகாத்து நிற்கும் வீரர்கள் பாராசூட் மூலம் குதித்து திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் குறித்து ராஜ்நாத் சிங்கிற்கு விளக்கப்பட்டது. ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்ட அவர், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.
Defence Minister Rajnath Singh arrives in Srinagar. He will review the situation at the borders and also visit forward areas in Jammu & Kashmir: Defence Minister's Office pic.twitter.com/7UDv7rQ7GJ
— ANI (@ANI) July 17, 2020
ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய ராஜ்நாத் சிங், எல்லை விவகாரம் பற்றி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால், தீர்வு எட்டப்படுவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. நம்முடைய நிலத்தின் ஓர் அங்குல பகுதியை கூட உலகின் எந்த சக்தியாலும் எடுத்து செல்ல முடியாது என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.
உங்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் சமீபத்தில், எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நம்முடைய வீரர்களில் சிலர் செய்த உயிர் தியாகம் செய்துள்ளனர். வீரர்களின் உயிரிழப்பு துயரத்தை ஏற்படுத்துகிறது என்றும், வீரமரணம் அடைந்த அந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார்.