திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கூட்டுபலாத்காரத்தால் நாட்டையே கொந்தளிக்க வைத்த மனித மிருகங்கள் , பேஸ்புக்கில் பெருமையாக என்ன பதிவிட்டுள்ளார்கள் தெரியுமா ?
அரியானா மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்பான முக்கிய குற்றவாளிஒருவர் தனது முகநூல் பக்கத்தில், பெண்களை தரம் குறைவாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
அரியானா மாநிலத்தை சேர்ந்த, சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று குடியரசுத்தலைவர் பதக்கம் பெற்ற 19 வயது மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்
அந்த சம்பவத்தில் பங்கஜ் என்ற ராணுவ வீரரும் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விரைந்து செயல்பட்டு 3 பேரை கைது செய்து தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் குற்றவாளிகளில் ஒருவனான நிஷு போகட் தன்னுடைய பேஸ்புக்கில் பெண்கள் குறித்து மிகவும் தவறான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
அதில், 'எனக்கு அதிகமான பெண் தோழிகள் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு நான் மற்ற பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறேன் என்று தெரியாது ' என பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி தொடர்ந்து குற்றவாளிகள் பலரும் தங்களுடைய பேஸ்புக் பக்கத்தில் ஆபாசமான வீடியோக்களையும் பதிவேற்றம் செய்திருக்கின்றனர்.இது பரபரப்பை கிளப்பி வருகிறது
மேலும் நிஷு போகட் உட்பட இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பலரும் ராணுவ வீரராக முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது .