Repo Percentage: ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிப்பு.. - ரிஸர்வ் வங்கி அறிவிப்பு.!



repo interest percentage increased

ரெப்போ வட்டி விகிதம் 6.5 % என ரிஸர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த் தாஸ் நிதிக்கொள்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின் படி, இன்று முதல் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

ரெப்போ வட்டி விகிதத்தின் அடிப்படை புள்ளிகளை 25 உயர்த்தி, ரெப்போ வட்டி விகிதம் 6.5% என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் இருந்து இந்தியாவில் ஏற்பட்ட பணவீக்கத்தை கட்டுப்படுத்த குறுகிய கடன் விகிதத்தை ரிசர்வ் வங்கி அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் வீடு மற்றும் வாகன கடன்கள் வட்டி உயர வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.