மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூபாய் நோட்டுகளில் எழுதினால் பணம் செல்லதா?.. ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு..!
நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில், நாம் சில நேரம் பணத்தின் விபரம் போன்றவற்றை சிறிய எழுத்தாக எழுதி வைப்போம். இன்னும் சிலர் ரூபாய் நோட்டுகளில் தங்களின் காதலை வெளிப்படுத்தவும் செய்வார்கள்.
இந்த நிலையில், ரூபாய் நோட்டுகளில் ஏதேனும் எழுதியிருந்தால், அந்த பணம் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இவ்விசயத்திற்கு மறுப்பு தெரிவித்த ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுகளில் ஏதேனும் எழுதினால் செல்லாது என கூறப்பட்டுள்ளது பொய்யான பிரச்சாரம் ஆகும். அது சட்டப்படி செல்லுபடியாகும். எனினும் சுத்தமான நோட்டுகள் என்ற கொள்கையின் பகுதியாக நோட்டுகளில் மக்கள் ஏதேனும் எழுத வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.