53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
என்னது! கோடிக்கணக்கான SBI வாங்கி வாடிக்கையாளர்களின் தகவல்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறதா! அதிர்ச்சி தகவல்
மும்பையில் இருந்து வரும் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான தகவல் சேமிப்பு பெட்டகம் ஆனது சரியான பாதுகாப்பின்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் உள்ளதாம்.
நாடு முழுவதும் சுமார் 42 கோடி வாடிக்கையாளர்களின் பணம், வரவு செலவு கணக்குகளை நிர்வகித்து வருகிறது பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ. ஆனால் இந்த வங்கியில் சேகரிக்கப்படும் தகவல்கள் குறைவான பாதுகாப்பு வளையத்தில் இருப்பதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இதனால் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு தகவல்கள் மிகவும் எளிதாக திருடு போக வாய்ப்புகள் உள்ளதாம்.
SBI Quick என்னும் ஒரு அம்சமானது எஸ்பிஐ வங்கி சார்பாக வாடிக்கையாளர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள தொகை, கடைசி பத்து பரிவர்த்தனைகள், புதிய செக் புக் விண்ணப்பித்தல் போன்ற பல்வேறு அம்சங்களை மொபைல் போன் மூலமே செய்து கொள்ளலாம்.
இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்காக ஒரு பிரத்தியேக தகவல் சேமிப்பு பெட்டகத்தினை(சர்வர்) எஸ்பிஐ வங்கி மும்பையில் ஓரிடத்தில் இயக்கி வருகிறது. இந்த பெட்டகத்தில் வாடிக்கையாளர்களின் மொபைல் எண், வங்கி கணக்கு எண்ணில் ஒரு பகுதி, கடைசியாக நடைபெற்ற பரிவர்த்தனைகள் மற்றும் இன்னும் சில தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. SBI Quick மூலம் வாடிக்கையாளர்கள் தகவல்களை பெற விரும்பும் பொழுது இந்த பெட்டகத்தில் இருந்து தான் அனைத்து தகவல்களும் பரிமாறப்படுகிறது.
எனவே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் இந்த பெட்டகத்தில் உள்ளன. தற்பொழுது இந்த பெட்டகம் சரியான பாதுகாப்பு அம்சங்களுடன் இல்லை என்பதனை சிலர் கண்டறிந்துள்ளனர். இந்த பெட்டகத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் தகவல்களை ஒரு நபர் மிகவும் எளிதாக திருடிவிட முடியும் எனவும் கூறியுள்ளனர்.
இந்த பெட்டகத்தில் உள்ள தகவல்களை பெற தனியாக எந்தவித கடவுச் சொல்லும் பயன்படுத்தப்படவில்லையாம். எனவே இதிலிருந்து ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அனுப்பும் குறுந்தகவல்களை மற்றவர்கள் எளிதாக படித்து விட முடியுமாம். மேலும் தற்பொழுது இந்த சர்வரில் கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற மொத்த பரிவர்த்தனைகளும் அடங்கியுள்ளன என்றும் தெரியவந்துள்ளது.