ஷாக்கிங் ரிப்போர்ட்... பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் லைசன்ஸ் சஸ்பெண்ட்... மத்திய சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கை.!



shocking-report-license-suspension-of-famous-pharmaceut

இந்தியாவின் மூன்று பெரிய  மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் லைசன்ஸ் மத்திய சுகாதாரத்துறை சஸ்பெண்ட் செய்திருக்கும் விவகாரம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக  மேல் முறையீடு செய்யப் போவதாக அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனங்களான க்யூபி பார்மாகெம், மெய்டன் பர்மா மற்றும்  மேரியான்பயோ டெக்  ஆகிய நிறுவனங்களின்  மருந்து தயாரிப்பிற்கான உரிமங்களை மத்திய சுகாதாரத்துறை சஸ்பெண்ட் செய்திருக்கிறது.

Indiaஇந்த நிறுவனங்களின் மருந்து தயாரிப்புகளில் அளவுக்கு அதிகமான நச்சுத்தன்மை இருப்பதாக உலக சுகாதார நிறுவனம்  தெரிவித்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.

Indiaதங்களது உரிமம் சஸ்பெண்ட்  செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக இந்த மருந்து தயாரிப்பு  நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மருந்து மற்றும் மாத்திரை தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்புகளில் நச்சுத்தன்மை உள்ள விவகாரம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.