3வது முறையாக சாதனை.! விண்வெளி நிலையத்திற்குள் உற்சாக நடனத்துடன் என்ட்ரி கொடுத்த சுனிதா வில்லியம்ஸ்.! வைரல் வீடியோ!!



sunitha-williams-dances-in-space-station-viral-video

அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை 58 வயது நிறைந்த சுனிதா வில்லியம்ஸ். இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளிக்கு பயணம் செய்தவர். இந்நிலையில் மூன்றாவது முறையாக  நேற்று முன்தினம் விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார்.

மூன்றாவது முறையாக விண்வெளி பயணம் 

போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர் விண்கலத்தின் மூலம் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் அமெரிக்க விண்வெளி வீரரான  புட்ச் வில்மோரும் உடன் சென்றுள்ளார். ஸ்டார்லைனர் விண்கலம், அமெரிக்கா புளோரிடா மாகாணத்தின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் பாய்ந்துள்ளது.

இதையும் படிங்க: #Breaking: தேசத்துக்காக தன்னை அர்ப்பணித்தவர் பிரதமர் நரேந்திர மோடி - பாஜக தேசிய தலைவர் நட்டா பாராட்டு.!

உற்சாகத்துடன் நடனமாடிய சுனிதா வில்லியம்ஸ் 

25 மணி நேர பயணத்திற்கு பிறகு வெற்றிகரமாக அவர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்துள்ளனர். விண்வெளி நிலையத்தை சென்றடைந்ததும் சுனிதா வில்லியம்ஸ் மகிழ்ச்சியுடன் நடனமாடி அங்கிருந்த சக ஆராய்ச்சியாளர்களை கட்டியணைத்து உற்சாகமடைந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தில் சுமார் ஒரு வாரம் தங்கி ஆய்வு மேற்கொண்டு மீண்டும் பூமிக்கு ஜூன் 14 ஆம் தேதி திரும்ப உள்ளனர்.

இதையும் படிங்க: பதவியேற்க தயாராகும் பிரதமர் மோடி; அடுத்தடுத்து நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள்.!