மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுரோட்டில் கயிறு கட்டி இழுத்துச் செல்லப்பட்ட ஆசிரியை! அதிர்ச்சி காரணம்!
மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்பகுதியில் உள்ள சிலரின் இடங்கள் சிறிதளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், ஆசிரியை ஸ்மிரிகோனா தாஸ் என்பவர் வீட்டு முன் அமைக்கப்படும் சாலை 12 அடி அகலமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. அதற்காக அவர் நிலத்தை விட்டுக் கொடுக்க ஒப்புக் கொண்டார்.
Bengal Woman Teacher, Sister Tied, Dragged. Trinamool Leader Led Assault.
— Paperboy (@PaperboyOnline) February 3, 2020
Now read the news in 18 different languages on the paperboy app download now.#trinamool #india #westbengal #assault #news #digitalnewspaper #newspaper #paperboy #paperboyapp #awaernessredefined pic.twitter.com/K3GqiWhLV9
ஆனால், திடீரென சாலையை 24 அடிக்கு விரிவாக்கம் செய்யப்போவதாகக் கூறிய பஞ்சாயத்து நிர்வாகத்தின் முடிவுக்கு ஆசிரியை ஸ்மிரிகோனா தாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பஞ்சாயத்து தலைவர் அமல் சர்கார் என்பவர் தலைமையிலான கும்பல் ஆசிரியை ஸ்மிரிகோனா தாஸை முழங்காலில் கயிறை கட்டி ரோட்டில் இழுத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் பதவிடப்பட்டுள்ளது. தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.