ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
பயங்கரம்.. பேட்டரி வாகனம் வெடித்து சிதறி வயோதிகர் பலி., குடும்பத்தினர் 3 பேர் படுகாயம்.!

எரிபொருளின் விலை மற்றும் பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டினை குறைக்க இ-ஸ்கூட்டர் விற்பனையை அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த சூழலில், மக்கள் வாங்கி உபயோகம் செய்யும் இ-ஸ்கூட்டர் பேட்டரி விபத்துகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு வல்லுநர் குழுவையும் அமைத்துள்ள நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உயிரிழப்பு சோகம் நடந்துள்ளது. அங்குள்ள நிசாமாபாத் மாவட்டத்தில் வீட்டில் சார்ஜ் செய்யும் போது பேட்டரி வாகனம் வெடித்து சிதறியுள்ளது.
இந்த விபத்தில், 80 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகிய 3 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பியூர் இ.வி நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.