தாய் என்றும் பாராமல், மது போதையில் 70 வயது மூதாட்டியை மகன் செய்த கொடூரம்.!



telungana men murdered his mother for drinks

குற்றத்திற்கு தூண்டும் மது

மது போதை குடிப்பவரின் உயிரை மட்டுமல்லாமல் அவருடன் இருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள் போன்றவர்களையும் பெருமளவில் பாதிக்கிறது. மது போதை தலைக்கேறிவிட்டால் நிதானம் இழக்கும் அவர்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். 

தாய், மகள் வித்தியாசம் இல்லாது குற்றம்

மேலும், தாய், மகள், தாரம் என்ற வித்தியாசம் கூட பார்க்காமல் கற்பழிப்பில் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்ட கொடூர மது அரக்கனால் ஒரு மகன் தனது தாயையே அடித்துக் கொன்ற சம்பவம் தான் தெலுங்கானா மாநிலத்தை அதிர வைத்துள்ளது.

இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் திருட்டு முயற்சி.. ஊரே கூடி திருடனை கொலை செய்த பயங்கரம்.. திடுக்கிட வைக்கும் காட்சிகள்.!

telungana

தாயிடம் நச்சரிப்பு

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் அஷ்டா எனும் கிராமத்தில் ஹிரா பாய் (70 வயது) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு கஜாராம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் குடி போதைக்கு அடிமையான நிலையில் அடிக்கடி தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். 70 வயதாகும் நிலையில் ஹீரா பாய்க்கு ஓய்வூதிய பணம் வந்து கொண்டு இருந்துள்ளது. இதை காரணமாக கொண்டுதான் அவரது மகன் பணம் கேட்டு வந்துள்ளார். 

ஆத்திரத்தில் கொலை

சம்பவ தினத்திலும் அதுபோல குடிப்பதற்கு பணம் கேட்டு தாயை மிரட்டி உள்ளார். ஆனால், ஹீரா பாய் பணம் கொடுக்கவில்லை. எனவே, மிகுந்த ஆத்திரமடைந்த மகன் அவரை சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதில் ஹீரா பாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மூத்த மகன் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவல் பேரில் விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கஜாராமை கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: குடும்பத் தகராறில் வெறிச்செயல்; மனைவி வெட்டிக்கொலை.!