அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை! 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு-காஷ்மீரில், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும், இடையே, துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தின் பாசல்பூரா (Pazalpora) பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் இன்று காலையில் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதனையடுத்து பாதுகாப்புப் படையினர், கடுமையான பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே, துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு பின்னர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.