பஸ்ஸில் வைத்து மனைவியை வெட்டி கொடூரமாக கொலை செய்த கணவன்!... சந்தேகத்தால் நடந்த விபரீதம்...!!!



The policeman who hacked his wife to death in a bus has been arrested

மனைவியை பஸ்ஸில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

குஜராத் மாநிலத்தில் சோட்டா உதய்வூரில் வசிக்கும் அம்ரித் ரத்வான், சூரத் மாவட்டத்தில் காவல் துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மங்குபென், அரசு பேருந்து நடத்துனராக வேலை செய்து வந்துள்ளார். 

மங்குபென் நேற்று பிகாபூர் கிராமத்திலிருந்து சென்ற பேருந்தில் நடத்துனராக இருந்துள்ளார். அப்போது அவரது கணவர் அம்ரித் ரத்துவான் திடீரென்று பேருந்தில் ஏறி மங்குபென்னை சரமாரியாக கத்தியால் வெட்டி உள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  அம்ரித் ரத்துவான் கத்தியுடன் அங்கேயே இருந்துள்ளார். 

இந்த சம்பவத்தை பார்த்த பயணிகள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நடத்துநர் மங்குபென் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கே இருந்த அம்ரித் ரத்வானை கைது செய்தனர்.

விசாரணையில் அம்ரித் ரத்வான், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொலை lசெய்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.