பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
அதிர்ந்துபோன இல்லத்தரசிகள்.. தக்காளி விலை கிடுகிடு உயர்வு..!
தக்காளி விலை சில வாரங்களுக்கு முன்பு கிலோ 10 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது 90 ரூபாய் வரை விற்பனையாகிறது.
நாட்டின் பல இடங்களிலும் தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால், விரைவில் அதற்கேற்றார்போல் விலையும் அதிகமாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையானது.
ஆனால், தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால், சந்தையில் கிலோ 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து மொத்த வியாபாரிகள் கிலோவுக்கு தங்களுக்கு பத்து ரூபாய் மட்டுமே லாபம் கிடைப்பதாக கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் தக்காளி விலை உயர்வது போல, வெங்காயம் விலையும் உயர்ந்து வருவதால் மக்கள் கவலையுடன் இருக்கின்றனர். மழை காரணமாக சாகுபடியில் வெங்காயம் மற்றும் தக்காளி வரத்து குறைந்து காணப்படுவதால், விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
ஆனால், வெங்காயம் மற்றும் தக்காளிகளின் விலை அதிகமாக இருப்பதால் மக்களிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விற்பனை செய்தாலும், தற்போது விற்பனை குறைந்தே காணப்படுகிறது எனவும், தங்களுக்கு லாபமும் குறைவாக கிடைக்கிறது என்று மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.