மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: ராம நவமியில் கலவரம் எதிரொலி; ஹனுமன் ஜெயந்தியை கொண்டாட உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்.!
ஹனுமான் ஜெயந்தியை எவ்வித பிரச்சனையும் இன்றி மக்கள் கொண்டாடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏப்ரல் 6ம் தேதியான நாளை உலகெங்கும் உள்ள அனுமான் பக்தர்களால் அனுமன் ஜெயந்தி சிறப்பிக்கப்படவுள்ளது. கடந்த மார்ச் 30ல் நடைபெற்ற ராம நவமி கொண்டாட்டத்தின் போது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கல்வீச்சு, தாக்குதல் போன்ற விருப்பதாகத நிகழ்வுகள் நடைபெற்றன.
இதனையடுத்து, இந்துக்களின் கடவுளாக கருதப்படும் ஹனுமன் ஜெயந்தியிலும் இவ்வாறான சர்ச்சை செயல்கள் நடக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அவ்வாறான நடவடிக்கைகளை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநில அரசுகளை அறிவுறுத்தி இருக்கிறார்.
இதுதொடர்பாக அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, "மாநிலத்தில் ஹனுமான் ஜெயந்தியை அமைதியான முறையில் சிறப்பித்து கொண்டாடி முடிக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும். பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்பட கூடாது" என ட்விட்டிலும் பதிவு செய்து அறிவுறுத்தியுள்ளார்.