"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
இரவு முழுவதும் செயல்பாட்டில் இருந்த ஹீட்டர்; மின் கசிவால் குடும்பமே காலி.. 5 பேர் பரிதாப பலி.!
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி, பரீத்பூர் பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர், நேற்று இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல உறங்கி இருக்கின்றனர்.
நள்ளிரவுக்கு மேல் இவர்களின் வீட்டில் மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்துள்ளது. வீட்டிற்குள் உறங்கிய குடும்பத்தினர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்து இருக்கின்றனர்.
அதிகாலை பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளைஞர், வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அஜய் குப்தா என்பவரின் மனைவி மற்றும் தம்பதிகளின் 3 குழந்தைகள் என குடும்பத்தினர் ஐந்து பேருமே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் இரவு நேரத்தில் ஹீட்டரை முழுவதுமாக செயல்பாட்டில் வைத்து உறங்கி இருக்கின்றனர். இதனால் ஏற்பட்ட மின்கசிவு மற்றும் தீ விபத்து காரணமாக, உறக்கத்திலேயே குடும்பத்தினர் மூச்சுத்திணறி பலியான சோகம் உறுதியானது.
இவர்களின் உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணமும் விசாரிக்கப்பட்டு வருகிறது.