திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
லாரி மீது மோதி அப்பளம்போல நொறுங்கிய டெம்போ.. 6 பேரின் உயிரை குடித்த விபத்தின் அதிர்ச்சி காட்சிகள்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சஹார் மாவட்டத்தில் வசித்து வரும் 20 க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஹரியானா மாநிலத்தில் உள்ள வைஷ்ணவி கோவிலுக்கு டெம்போ வேனில் பயணம் செய்துள்ளனர். இவர்களின் வாகனம் அம்பாலா பகுதியில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் மீது நேரடியாக மோதி விபத்திற்குள்ளானது.
6 பேர் பலி., 14 பேர் படுகாயம்
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இவ்விபத்தில், 6 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த மே 24 ம் தேதி அதிகாலை நேரத்தில் நடைபெற்றது.
இதையும் படிங்க: வாகனத்தின் பின்புறம் தொங்கியவாறு சாகசம்; இளைஞர் தலையில் காயம்பட்டு துள்ளத்துடிக்க பலி.!
अंबाला (हरियाणा) में रोड एक्सीडेंट का #CCTV
— News360* (@News3Sixty) May 26, 2024
24 मई को वैष्णो देवी जा रही ट्रेवलर बस पीछे से ट्रक में घुसी थी। इस हादसे में 6 तीर्थयात्रियों की मौत हो गई थी। सभी बुलंदशहर (UP) के रहने वाले थे।#Accident #Ambala pic.twitter.com/vhmZ3hQpRE
அதிர்ச்சி காட்சிகள் வைரல்
இந்நிலையில், அன்று நடந்த விபத்து சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகி இருக்கிறது. நள்ளிரவு நேரத்தில் டெம்போ வேன் லாரியின் மீது நேரடியாக மோதிய காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: சரக்குடன் விபத்திற்குள்ளான லாரி; கையில் கிடைத்த பாட்டிலுடன் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்.!