பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
மாயமான ஒன்றரை வயது சிறுமியின் மண்டை ஓடை கவ்வி வந்த நாய்.. நடந்தது என்ன?.. துப்பு கிடைக்காமல் திணறும் அதிகாரிகள்.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹமிர்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் - விபின் தம்பதி. இவர்களின் மகள் ஒன்றரை வயது சிறுமி சிருஷ்டி குப்தா. சிறுமி கடந்த டிசம்பர் 20ம் தேதி மயமாகினார்.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
சிறுமி நேற்று வரை கிடைக்கவில்லை. இதனிடையே, அப்பகுதியில் சுற்றி வந்த நாய்கள் மண்டைஓடு எலும்புகளை தூக்கி வலம் வந்தன. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் நாயை விரட்டி மண்டை ஓடை மீட்டனர்.
காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகள் மண்டை ஓடை தடவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்பகுதியில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.