நாடே அதிர்ச்சி..! என் கூட உட்கார்ந்து நீ எப்படி சாப்பிடலாம்?.. தலித் சமூகத்தவர் கொடூர கொலை.. பதறவைக்கும் சம்பவம்.!



Uttarakhand Kedarnath Village Dalit Man Ramesh Ram Murder at Wedding Ceremony

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற தலித் சமூகத்தை சார்ந்தவர், மேல்ஜாதியினருடன் சமமாக அமர்ந்து சாப்பிட்டதால் அடித்தே கொலை செய்யப்பட்ட பெரும் கொடூரம் நடந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சாம்பாவாட் மாவட்டம் கேதார்நாத் கிராமம், தேவிதுரா பகுதியில் வாடகை கட்டிடத்தில் டெய்லர் கடை வைத்து நடத்தி பணியாற்றி வருபவர் ரமேஷ் ராம் (வயது 46). இவர் தலித் சமூகத்தை சார்ந்தவர். இவர் துங்கர் சிங் என்பவருக்கு சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து தையல் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், துங்கர் சிங் வீட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. 

இந்த திருமணத்திற்கு, கடை கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துள்ள அனைவருக்கும் அழைப்பிதழ் வைத்து வரவேற்கப்பட்ட நிலையில், ரமேஷ் ராமுக்கும் வரவேற்பு இதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் கடந்த நவ. 28 ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். துங்கர் சிங் வேறு சமூகத்தினராக இருந்த நிலையில், வரவேற்பின் போது அனைவருக்கும் உணவுகள் பரிமாறப்பட்டுள்ளது. 

Uttarakhand

வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அனைவரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்த நிலையில், ரமேஷ் ராமும் சாப்பிட்டுள்ளார். இதன்போது, அங்கிருந்த சிலர் தலித் சமூகத்தை சார்ந்த நீ எங்களுடன் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிடலாமா? என பிரச்சனை செய்து, ரமேஷ் ராமை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ரமேஷ் ராம் படுகாயம் அடைந்துள்ளனர்.

அவரை மீட்ட பிறர் அங்குள்ள லோஹகாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிலமணிநேர வன்முறை சம்பவத்திற்கு பின்னர் அனுமதி செய்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர், இறந்துவிட்டதாக தெரிவிக்கவே, காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ரமேஷ் ராமின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

ரமேஷ் ராமின் குடும்பத்தினர் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்தும், இரவு நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லையே என்ற கவலையில் இருக்க, அவரது அலைபேசிக்கு தொடர்பு கொண்ட போது முதலில் எடுக்கவில்லை. பின்னர் தாமதமாக அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, மருத்துவமனையில் அவர் உயிரிழந்து இருக்கிறார் என்ற தகவல் மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Uttarakhand

பதறிப்போன குடும்பத்தினர், கடந்த நவ. 29 ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ரமேஷ் ராமின் மனைவி துளசி தேவி கணவரின் உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருப்போரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், ரமேஷின் உடலில் பல இடங்களில் கொடூரமாக தாக்கப்பட்டதற்கான காயமும் இருந்துள்ளது என்று அவரது இளவயது மகன் சஞ்சய் தெரிவித்துள்ளார். 

இரவு நேரத்தில் பல கொடூரங்கள் நடந்த நிலையில், ரமேஷ் ராமுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அவரின் மகள் ராக்கியும் கொடூரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் சிலரின் மீது வழக்குப்பதிவு மட்டும் செய்துள்ள நிலையில், யாரின் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.