96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தம் அடித்து தௌலத்தாக ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிறுமி; பெல்ட் ட்ரீட்மெண்ட் கொடுத்த தந்தை...!
இன்றுள்ள இளம்தலைமுறை என்பது சமூக வலைத்தளங்களில் உள்ள விடீயோக்களை பார்த்து ரீல்ஸ் மோகத்திற்கு அதிகளவு அடிமையாகி இருக்கிறது. இதனை பார்த்து தங்களின் பழக்கவழக்கத்தை மாற்றிக்கொள்ளும் சிறார் கும்பல், தாங்கள் பார்த்து அதனை செய்ய முயல்கிறது.
தம் அடித்த சிறுமி
அந்த வகையில், மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்ததாக கூறப்படும் சிறுமி ஒருவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகிரெட் பிடிப்பது போன்ற வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டு இருந்தார். இதனால் சிறுமியின் பெற்றோர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில், அவர் வீட்டிற்கு வரும்வரை தயாராக காத்திருந்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதல் ஜோடிக்கு சவுக்கடி தண்டனை; நடுரோட்டில் கதறிய இளம்பெண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்.!
பெல்ட் ட்ரீட்மெண்ட்
அச்சமயம் வீட்டிற்கு வந்த சிறுமி தனது தந்தையால் பெல்ட் கொண்டு சரமாரியாக கவனிக்கப்பட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருபக்கம் சிறுமிக்கு எதிராக அனைவரும் கண்டன குரல் எழுப்பினாலும், தந்தை செயலை வீடியோவாக வெளியிட்டு இருக்க கூடாது எனவும் கூறுகின்றனர்.
10 - 20 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் உள்ள பெரியவர்கள் சிகிரெட் பிடிப்பதை பார்த்து, வயது கோளாறில் ஆர்வம் ஏற்பட்டு ஒரு பீடி குடிக்க பயந்து பயந்து ஊர்விட்டுஊர் சென்று புகைத்துப்பார்ப்பார்கள். அப்படியும் மாட்டிக்கொண்டு வீட்டில் மிகப்பெரிய கவனிப்பிற்கு உள்ளாகுவர்கள். ஆனால், இன்றளவில் போதைப்பொருட்கள் பயன்பாடு என்பது வயது வித்தியாசமின்றி எளிதாகிவிட்டது.
இதையும் படிங்க: சொந்த மகளை சீரழித்த தந்தை; வீடியோவை வெளியிட்டு நியாயம் கேட்ட மகள்.. பதறவைக்கும் சம்பவம்.!