#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டெல்லி அணியை சொந்த ஊரில் வைத்து கதறவிட்ட சன்ரைசர்ஸ் அணி! திருப்பி அடிக்குமா டெல்லி அணி!
ஐபிஎல் சீசன் 12 தற்போது நடைபெற்று வருகிறது. 2019 ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் , டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியானது டெல்லி பெரோஷா கோட்லா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் புவனேஷ் குமார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணியின் துவக்க நாயகர்களாக களமிறங்கிய பிரிதிவ் ஷா, ஷிகர் தவான் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
அடுத்ததாக களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக 41 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கேட்ச் ஆகி வெளியேற்றினார். அடுத்ததாக இறங்கிய ரிஷாப் பண்ட், ராகுல், கோளின் இங்கிரான் தலா 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை எடுத்து ஐதராபாத் அணிக்கு 130 என்ற வெற்றி இலக்கை நிரணயித்துள்ளது.