மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செரிமான பிரச்சனைகளை தீர்க்கும் அவரைக்காய் முட்டை பொரியல்..! செய்வது எப்படி?..!
உடலுக்கு பல்வேறு சத்துக்களை அள்ளித்தரும் அவரைக்காய் முட்டை பொரியல் எவ்வாறு செய்வது என்பது பற்றியதுதான் இந்த செய்திக்குறிப்பு.
அவரைக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவுகிறது. அத்துடன் அவரை அதிகமாக உண்பதன் மூலம் வெள்ளெழுத்து குறைபாட்டை சரிசெய்யவும், ரத்தநாளங்களில் கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 1
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு
அவரைக்காய் - 50 கிராம்
மஞ்சள்தூள் - சிறிதளவு
சீரகம், கடுகு - 1 சிட்டிகை
கடலைப்பருப்பு - 1 சிட்டிகை
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
★முதலில் பச்சை மிளகாய், அவரைக்காய் மற்றும் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
★அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
★பின் அதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, அவரக்காய் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் போட்டு வதக்க வேண்டும்.
★அவரைக்காய் நன்கு வதங்கியதும், அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி விட வேண்டும்.
★தொடர்ந்து இரண்டும் நன்றாக வெந்து தனித்தனியாக பிரிந்து உதிரியாக வரும் வரை வதக்கி இறக்கினால் சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் தயாராகிவிடும்.