இந்த அறிகுறிகள் ஏதாவது இருந்தால் நீங்கள் தவறான ஒருவரை தேடி திருமணம் செய்துள்ளீர்கள் என்று அர்த்தம்...! உஷார்..!



bad-signs-of-unhappy-relationship

ஆசை 60 நாள், மோகம் 30 நாள் என பழமொழி உண்டு. கல்யாணம் ஆன புதிதில் கணவன் மனைவி அந்யோனியமாக இருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், நாட்கள் செல்ல செல்ல, கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டைகள் வரத்தொடங்குகிறது.

சண்டைகள் வருவதும், கருத்து வேறுபாடுகள் வருவதும் குடும்ப வாழ்க்கையில் சாதாரமான ஓன்று என்றாலும், பின்வரும் விஷயங்களை நீங்கள் அதிகம் உணர்ந்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த வாழக்கை துணை சரி இல்லை என்றே அர்த்தம்.

1 . சோகமாக இருப்பது.
அனைவரும் எப்போதும் சந்தோசமாக இருக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். திருமணத்திற்கு பின் உங்கள் துணையால் உங்களுக்கு மனநிம்மதி கிடைக்காமல், எப்போதும் சோகமாகவே நீங்கள் உணர்ந்தால் அந்த பிரச்சனைக்கு காரணம் உங்கள் வாழ்க்கை துணைதான்.

2 . நேர்மை இல்லாமை.
பொதுவாக எந்த ஒரு உறவாக இருந்தாலும் நேர்மையுடன் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. கணவன் மனைவி உறவுக்குள் நேர்மை என்பது மிகவும் முக்கியமான ஓன்று. உங்கள் துணை உங்களை உங்களை ஏமாற்றுவதாக தெரிந்தால், துரோகம் செய்வதாக உங்களுக்கு தோன்றினால் இதை பற்றி நீங்கள் சிந்திக்கவேண்டியது மிகவும் அவசியமான ஓன்று.

3 . பேச விருப்பம் இல்லாமல் இருப்பது.

கணவன் மனைவி என்றாலே மனம்விட்டு பேசவேண்டியது மிகவும் அவசியமான ஓன்று. உங்கள் துணை உங்களுடன் பேச தயாராக இல்லை, நீங்கள் ஒருபக்கம், உங்கள் துணை ஒருபக்கம் என்றால் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்க்கையின் ஆர்வத்தை இழந்துவிட்டிர்கள் என்று அர்த்தம்.

4 . தனிமை.
நீங்கள் அருகில் இருந்தும், உங்கள் துணை உங்களை தேடாமல் அதிக நேரம் தனிமையை துணையாகிக்கொண்டு, தனிமையிலையே இருந்தால் அதுவும் நீங்கள் சிக்கலில் உள்ளீர்கள் என்று அர்த்தம்.