ஆட்டின் தலையை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?..! தெரிஞ்சிக்கோங்க மக்களே.!



Benefits of eat goat head

 

நம்மில் பலரும் இறைச்சி விரும்பிகளாக இருப்போம். இவ்வாறான இறைச்சி விரும்பிகளின் ஒருசிலர் மீன், கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சிகளை மேலோட்டமாக சாப்பிட்டு இருப்போம். சிலருக்கு கோழி, ஆடு இறைச்சியின் எழும்புக்கறி என்றால் கொள்ளை பிரியத்துடன் சாப்பிடுவார்கள்.. 

ஆட்டுக்காலில் சூப் வைத்து குடிப்பது பல நன்மைகளை உடலுக்கு வழங்கும். அதனை உப்புக்கண்டம் போட்டும் சாப்பிடுவார்கள். ஆட்டு குடல், ஈரல், குடல் போன்றவற்றை விரும்பி சாப்பிடுவோர் இருக்கிறார்கள். இன்று ஆட்டின் தலைக்கறி சாப்பிடுவது நல்லதா?? என தெரிந்துகொள்ளலாம். 

Goat head

ஆடு தலைக்கறி பெரும்பாலானோரால் விரும்பப்படுவது இல்லை. ஏனென்றால் அதனை சமைக்கும் பக்குவம் என்பது சிரமமானது. ஆனால், அதனுள் பல நன்மைகள் நிறைந்து கிடக்கின்றன. ஆடு இயற்கையாக உடலுக்கு குளிர்ச்சி வழங்கும் உணவை சேர்ந்தது. 

கோழி இறைச்சியை சூடு என வெறுக்கும் பலரும் ஆடு இறைச்சியை சாப்பிடுவார்கள். ஆட்டின் மூளை தாது விருத்தியை தரும். கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும். நினைவாற்றலை மேம்படுத்தும். வலிமையான மூளைக்கு நன்மையை ஏற்படுத்தும். ஆட்டின் மூளையை உணவில் சேர்த்துக்கொள்வது கபத்தை நீக்கும். மார்பில் ஏற்படும் புண்களை குணப்படுத்தும். மார்பகத்தின் வலிமையை அதிகரிக்க உதவும்.