"முருங்கையை வளர்த்தவன் வெறுங்கையோடு போவான்!" இது உண்மையா?



Benefits of murunga tree

முருங்கையை வளர்த்தவன் வெறுங்கையோடு போவான் என்பது முன்னோர்கள் வாக்கு. இதற்கு காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ளாமலேயே யாரும் முருங்கை மரத்தை வளர்ப்பதில்லை. முன்னோர்கள் இப்படி சொல்லக் காரணம் என்ன தெரியுமா?

Lifestyle

பொதுவாக முருங்கை மரம் சற்று உறுதியற்ற மரம். இதை வீட்டில் வளர்த்தால் இதன் கிளைகள் முறிந்து வீட்டை சேதப்படுத்தி விடும். மேலும் வீட்டில் சிறுவர்கள் இருந்தால், அவர்கள் மரத்தின் மேல் ஏறி விளையாடும்போது கிளை எளிதில் முறிந்து சிறுவர்கள் கீழே விழுந்து அடிபட வாய்ப்பு அதிகம்.

மேலும் முருங்கை மரத்தில் அதிகளவில் கம்பளிப்பூச்சி உற்பத்தியாகும். கம்பளிப்பூச்சி உடலில் பட்டாலே அதிகளவில் அரிப்பை ஏற்படுத்தும். வீட்டின் அருகில் இந்த மரத்தை வளர்த்தால் இந்தப் பூச்சிகள் வீட்டினுள்ளும் வர வாய்ப்புகள் அதிகம்.

Lifestyle

மேலும் முருங்கை மரத்தில் எதிர்மறை ஆற்றல்கள் தான் அதிகளவு நிறைந்திருக்கும். அவை நம்மை பாதிக்க கூடும் என்பதாலும் தான் வீட்டின் அருகில் முருங்கை மரத்தை வளர்க்க கூடாது என்று முன்னோர்கள் கூறினர். ஆனால் வீட்டை விட்டு சற்று தள்ளி முருங்கை மரத்தை தாராளமாக வளர்க்கலாம்.