மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சர்க்கரை நோயாளிகள் தேங்காய் பால் குடிக்கனும்.. ஏன் தெரியுமா.?!
தேங்காய் பாலில் ஏராளமான சத்துககள் நிறைந்துள்ளன. இதில் மாங்கனீசு வலுவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் வாரத்திற்கு 3 முறை தொடர்ந்து குடித்து வந்தால் நல்லது. இந்த பாலில் அதிகளவு பாஸ்பரஸ் மற்றும் போதுமான அளவு கால்சியம் இருப்பதால் சரும நோய்களுக்கும் தீர்வாக அமைகிறது.
இரும்புச்சத்து மிக்க இந்த தேங்காய் பால் ஒரு கப் எடுத்துக் கொள்ளும்போது எலும்பை பலப்படுத்த உதவுகிறது. ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால் திடீரென்று தசைப்பிடிப்பு மற்றும் தசை வலி இருக்கும் போது கொஞ்சம் தேங்காய் பால் குடித்தால் உடனே பயனளிக்கும்.
இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ஹீமோகுளோபீன் அதிகரிப்பது குறையத் தொடங்கும். அந்த சமயத்தில் தேங்காய் பால் குடித்தால் அதன் மூலமாக ஏற்படும் இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல், இரத்த சோகை ஏற்படுவதை சரிசெய்கிறது.
வைட்டமின் சி அதிகம் கொண்டுள்ள தேங்காய் பால் உடலுக்குள் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். இந்த பாலில் நார்ச்சத்து, செலீனியம், பொட்டாசியம் போன்றவை அதிகம் இருப்பதால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு நிவாரணியாகத் திகழ்கிறது.
தேங்காய் பாலில் உள்ள நார்ச்சத்து பசியைப் போக்கும். பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்த கொதிப்பின் அளவைக் குறைக்கச் செய்யும். மேலும் அல்சர் என்று சொல்லக்கூடிய இந்த வயிற்றுப்புண் உள்வர்கள் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தேங்காய் பால் குடித்து வந்தால் வெகு விரைவில் குணமாகும்.