கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
ஆஸ்துமா, மலச்சிக்கலை குணமாக்கும் கத்தரிக்காய் சட்னி... வீட்டிலேயே 5 நிமிடத்தில் செய்வது எப்படி?.!
ஆஸ்துமா, மலச்சிக்கலை குணப்படுத்தும் கத்தரிக்காய் சட்னி எப்படி செய்வது என்பது பற்றியதுதான் இந்த செய்திக்குறிப்பு.
உடலுக்கு பல்வேறு சத்துக்கள் மற்றும் பயன்களை கத்தரிக்காய் அளிக்கிறது. கத்தரிக்காயில் குறைந்த கலோரியும், நிறைந்த சத்துக்களும் இருக்கிறது. எடை குறைக்க விரும்புவர்களுக்கு கத்தரிக்காய் மிகவும் ஏற்றது. ஆஸ்துமா, சளி, பித்தம், கீழ்வாதம், வாதநோய், தொண்டைக்கட்டு, கரகரப்பான குரல், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்துகிறது.
தேவையான பொருட்கள் :
தக்காளி - 3
கத்தரிக்காய் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 1
பெரிய வெங்காயம் - 1
கடுகு, உளுந்து - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
கருவேப்பிலை - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
★முதலில் கத்தரிக்காய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
★பின் குக்கரில் தண்ணீர் ஊற்றி தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, கத்தரிக்காயை சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விட வேண்டும்.
★அடுத்து ஆவி அடங்கியதும் தக்காளியின் தோல்நீக்கி, மிக்ஸியில் இந்த கலவையை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
★ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, உளுந்து, கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
★பின்னர் அரைத்து வைத்த கத்திரிக்காய் கலவையை, தண்ணீருடன் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
★இறுதியாக எண்ணெய் பிரிந்து கெட்டிப்பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து இட்லி, தோசைக்கு சைட்டிஷாக சேர்த்து சாப்பிட்டால் சுவை அமிர்தத்தை மிஞ்சும் அளவிற்கு இருக்கும்.