தாவர தங்கமான கேரட் ஜுஸ் குடித்தால் புற்றுநோய் கூட சரியாகுமா.?! ஆச்சர்ய நன்மைகள்.!
கேரட்டிற்கு மறுபெயர் தாவரத் தங்கம் என்று சொல்லப்படுகிறது. ஏன் கேரட்டிற்கு மட்டும் இந்தப் பெயர் வந்தது.? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம். கேரட்டை நாம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும்போது முகம் மற்றும் மேனி பளபளப்பு தோற்றத்தைக் கொடுக்கும். கேரட் சாறு குறைந்த கலோரி மற்றும் நார்ச்சத்தைக் கொண்டுள்ளது.
கேரட் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை, உப்பு எதுவும் சேர்க்காமல் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். மேலும் வேறு எந்த காய் கணிக்கும் இல்லாத சிறப்பு குணம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் புற்று நோய்க்கு அருமருந்தாக இந்த கேரட் விளங்குகிறது.
கேன்சர் என்று சொல்லக்கூடிய புற்றுநோய்க்கு மருந்தே கண்டுபிடிக்க படாத நிலையில் இந்த கேரட் ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்ட ஒரே காய் கேரட் மட்டுமே. கேரட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் k1, பொட்டாசியம், பயோடின் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதை கண்பார்வையை கூர்மைப்படுத்துதல், இரத்த அழுத்தத்தை குறைத்தல், புரோட்டின் மற்றும் ஆற்றலை அதிகரித்தல் போன்ற பலவிதமான நன்மைகளை நமக்கு அள்ளித் தருகிற ஒரு காய் என்றால் அது கேரட் தான். கேரட்டில் சாறு எடுத்து குடித்து வந்தால் எலும்புகளுக்கு உறுதியளித்து வலுவாக வைத்துக் கொள்கிறது.
கேரட்டில் பீட்டா கரோட்டின் என்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சத்து உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பீட்டா கரோட்டினில் உள்ள அணு கூறுகள் தான் புற்றுநோயை எதிர்த்து போராடும் ஆற்றலை கொண்டது. நம் வயிற்றில் உள்ள கோளாறுகள் மூலம் வாய் துர்நாற்றம் ஏற்படும். அப்போது இந்தக் கேரட்டின் சாற்றை குடித்தால் பிறகு துர்நாற்றம் காணாமல் போய்விடும் என்று நீங்களே சொல்வீர்கள். உங்களுக்கு பசி எடுக்கும் போது ஒரு கேரட்டை பச்சையாக சாப்பிடுங்கள் பசியே பறந்து போய்விடும். எனவே கேரட்டின் சாற்றில் பல அற்புதமான நன்மைகள் நம் உடலுக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.