உடல் பருமனை குறைக்கும் கோவக்காய் கார சட்னி..!



delicious-ivy-gourd-curry-chutney

கோவக்காய் உடல் பருமனை குறைக்கும் தன்மை கொண்டது. மேலும், உடலை ஆரோக்கியமான எடையில் வைத்திருக்க உதவுகிறது. இப்போது, கோவக்காய் கார சட்னி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

கோவக்காய் - 1/4 கிலோ ( நறுக்கியது )

காய்ந்த மிளகாய் - 7

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 10 பல் 

உப்பு - தேவையான அளவு 

சின்ன வெங்காயம் - 15

பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி 

கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி 

வெள்ளை உளுந்து - 1/2 தேக்கரண்டி 

கறிவேப்பிலை - 1 கொத்து 

கடுகு - 1 தேக்கரண்டி 

நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி 

புளி - நெல்லிக்காய் அளவு 

தேங்காய் துருவல் - 1 கப் 

செய்முறை :

முதலில் அடுப்பைப் பற்ற வைத்து ஒரு வாணலியை வைக்கவும். அதில், 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளின் படி கடலைப்பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும். சிறிது நேரம் வதங்கியதும் நறுக்கிய கோவக்காய் 1/4 கிலோ, நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து நன்றாக வதக்கவும். 

இதையும் படிங்க: குதிரைவாலியில் பூரண கொழுக்கட்டை.. அசத்தல் சுவையில் ஒரு ஆரோக்கியமான ரெசிபி.! உடனே ட்ரை பண்ணுங்க.!

Ivy gourd

இப்போது, அதில் ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். பின்பு, நன்றாக ஆற வைத்து ஒரு மிக்சி கப்பில் இவைகளை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். 

பிறகு, அதே வாணலியில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு 1/2 தேக்கரண்டி, வெள்ளை உளுந்து 1/2 தேக்கரண்டி மற்றும் 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் சட்னியை தாளித்து விட வேண்டும். இப்போது சுவையான கோவக்காய் கார சட்னி தயார்.

இதையும் படிங்க: கோடை வெயிலுக்கு குளிர்ச்சியான ரோஸ் மில்க்..! கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்..!!