எண்ணெய் பலகாரங்கள் அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு பிரச்சினைகளா?
பொதுவாக எண்ணெய் பலகாரங்கள் அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. என்னதான் எண்ணெய் பலகாரங்கள் சுவையாக இருந்தாலும் அதிகம் சாப்பிட்டால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.
ஏனென்றால் எண்ணெய் பலகாரங்களில் அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் இருக்கும். எனவே அதிகமாக சாப்பிட்டால் உடல் பருவம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக எண்ணெய் பலகாரங்கள் அதிகமாக சாப்பிட்டால் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும். எண்ணெய் பலகாரங்களில் அதிக உப்பு இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எண்ணெய் பலகாரங்கள் பலகாரங்களில் அதிக கலோரிகள் இருப்பதால் சர்க்கரை நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக எண்ணெய் பலகாரங்கள் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதால் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். இதனால் மூட்டு வலி மற்றும் உடல் சோர்வுக்கும் வழிவக்கும். எனவே எண்ணெய் பலகாரங்களை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.