மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இட்லி மீந்துவிட்டாதா?... சுவையான முட்டை கொத்து இட்லி செய்வது எப்படி??..!
இனி காலையில் செய்த இட்லி மீந்துவிட்டது என கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. இட்லியை வைத்து ஈசியாக முட்டை கொத்து இட்லி ரெசிபி நொடியில் தயாராகிவிடும்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 3 தேக்கரண்டி
முட்டை - 3
உப்பு - தேவைக்கேற்ப
கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 1
தனியாத்தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகுபொடி - 1/2 தேக்கரண்டி
செய்முறை :
★முதலில் இட்லியை சிறிது, சிறிதாக உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
★அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளிக்க வேண்டும். பின் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
★வெங்காயம் சற்று வதங்கியதும், இஞ்சி பூண்டு, விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
★பின் மிளகாய்தூள், தனியாதூள், மஞ்சள்தூள், மிளகு தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
★தொடர்ந்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி உதிர்ந்து வரும் வரை வதக்க வேண்டும். பின் அதனுடன் இட்லியை சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்து தீயில் ஐந்து நிமிடங்களுக்கு பிரட்டினால் சுவையான முட்டை கொத்து இட்லி தயாராகிவிடும்.